#BREAKING ஆன்லைன் ரம்மியால் பல லட்சம் ரூபாய் இழப்பு.. ஐ.டி ஊழியர் தற்கொலை..!

செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இதில் சிறிதளவு பணத்தைப் பெற்றுள்ளதால், மேலும் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தனது வங்கி கணக்கில் இருந்து சுமார் 10 லட்சத்தை ஆன்லைன் ரம்மி மூலம் இழந்துள்ளார். மேலும், 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் விளையாடியுள்ளார். 

Loss of several lakhs of rupees due to online rummy .. IT employee commits suicide

வாணியம்பாடி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை கண்டித்ததால் சென்னையில் பணியாற்றி ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தை அச்சுறுத்தும் சொல்லாக மாறிவிட்டது. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் பட்டியல் அதிகரித்த வண்ணம் உள்ளது. பலரும் தங்களின் செல்போன் வழியே மறைமுகமாக விளையாடி வந்த இந்த ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள் தற்போது பலரின் உயிரை எடுக்கும் ஒன்றாக மாறிவிட்டது. இதனை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது. 

இதையும் படிங்க;- எது நடக்கக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் நினைத்ததோ அது நடந்திடுச்சு.. அலறும் ராமதாஸ்..!

Loss of several lakhs of rupees due to online rummy .. IT employee commits suicide

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், தனது வாக்கை செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு சென்ற ஆனந்தன் தனது வாக்கை பதிவு செய்தார். 

Loss of several lakhs of rupees due to online rummy .. IT employee commits suicide

இந்நிலையில், அவர் தனது வீட்டில் தொடர்ந்து செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இதில் சிறிதளவு பணத்தைப் பெற்றுள்ளதால், மேலும் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தனது வங்கி கணக்கில் இருந்து சுமார் 10 லட்சத்தை ஆன்லைன் ரம்மி மூலம் இழந்துள்ளார். மேலும், 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் விளையாடியுள்ளார். 

இதையும் படிங்க;- 72 மணிநேரத்தில் ஆண்டியை கரெக்ட் செய்த கார் டிரைவர்.. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து உல்லாசம்..!

Loss of several lakhs of rupees due to online rummy .. IT employee commits suicide

இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து மகனை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஆனந்தன் செல்போனை உடைத்துவிட்டு, வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆனந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இளைஞரின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios