வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ( 30) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அஸ்வினி (26) இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது. 

வேலூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டை தேடி சென்றபோது மின்சாரம் தாக்கியதில் தம்பதி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ( 30) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அஸ்வினி (26) இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது. 

இதையும் படிங்க;- ஓயாமல் வரதட்சணை டார்ச்சர்.. 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. காதல் கணவரை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

நேற்று இரவு ஜெயப்பிரகாஷ், அஸ்வினி இருவரும் அவர்களுக்கு சொந்தமான பசு மாட்டை ஓட்டி வருவதற்காக விவசாய நிலத்திற்கு சென்றனர். அங்கிருந்து மாட்டை வீட்டிற்கு ஓட்டி வந்தனர். வழியில் உள்ள விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக யாரோ மின்வேலி அமைத்துள்ளனர். அந்த மின்வேலியில் பசுமாடு மற்றும் ஜெயப்பிரகாஷ், அஸ்வினி ஆகியோர் சிக்கினர்.

இதையும் படிங்க;- பொதுமக்களே உஷார்.. பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி இளம்பெண்.. சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து உயிரிழப்பு..!

இதில், மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதில், பசுமாடும் உயிரிழந்தது. இதனையடுத்து, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இருவரும் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவ தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தம்பதியினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாய நிலத்தில் மின்வேலி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.