ஓயாமல் வரதட்சணை டார்ச்சர்.. 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. காதல் கணவரை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

காரைக்கால் அடுத்த நிரவி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகள் வினோதா(22). காரைக்கால் பூவம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பாரத்(27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு நேருநகரில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். 

dowry tarchar...pregnant woman commits suicide

காரைக்காலில் வரதட்சணை கொடுமையால் 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காதல் கணவர், மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காரைக்கால் அடுத்த நிரவி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகள் வினோதா(22). காரைக்கால் பூவம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பாரத்(27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு நேருநகரில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.  இந்நிலையில், பாரத்தை பார்க்க வரும் போதெல்லாம் அவரது தாய் ஜோதி மற்றும் அக்கா பரிமளா ஆகியோர் சேர்ந்து வரதட்சணை கேட்டு வினோதாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதற்கு அவரது காதல் கணவரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரிந்த வினோதாவின் பெற்றோர் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டில் பீரோ உள்ளிட்ட பொருட்களை வினோதாவுக்கு வாங்கி கொடுத்தனர். 

dowry tarchar...pregnant woman commits suicide

இந்நிலையில், 6 மாத கர்ப்பிணியான வினோதாவுக்கு 7ம் மாதம் வளைகாப்பு நடத்த அவரது பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி வருமாறு கணவர், மாமியார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால், விரக்தி அடைந்த வினோதா கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வினோதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

dowry tarchar...pregnant woman commits suicide

மேலும், அவர் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், கணவர், மாமியார், நாத்தனார் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். வளைகாப்புக்கும் பணம் வாங்கிவரும்படி டார்ச்சர் செய்தனர். எனது சாவுக்கு அவர்கள் தான் காரணம் என எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கணவர் பாரத், மாமியார் ஜோதி ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான பரிமாளவை போலீசார் தேடி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios