திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த கல்லூரி மாணவர் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், புங்கம்பட்டு நாடு ஊராட்சி, கல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ் இவருடைய மகன் வேடி(வயது 20). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் திருப்பத்தூர் கிராமிய போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று இரவு அரசுக்கு சொந்தமான கிணற்றில் கல்லூரி மாணவர் வேடி சடலமாக கிடந்தார். 

மின்னல் வேகத்தில் சுத்தப்படுத்தப்பட்ட நகரம்; தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த கல்லூரி மாணவர் மர்மமான முறையில் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D