அவசரம்னா வேற ஹாஸ்பிடலுக்கு போ..! திருப்பத்தூரில் அரசு மருத்துவர் அடாவடி பேச்சு
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளியிடம் பணியில் இருந்த மருத்துவர் அடாவடியாக பேசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுண்ணாம்புகாளை பகுதியைச் சேர்ந்தவர் சபீர் அகமது. இவரது மனைவி மொகரம். இவருக்கு நேற்று இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இரவு 11 மணிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் நோயாளியை பரிசோதிக்காமலேயே ஒரு ஊசியை பரிந்துரைத்து நோயாளிக்கு செலுத்துமாறு பரிந்துறைத்துள்ளார். அதன் அடிப்படையில் மருத்துவமனை பணியாளர்கள் ஊசி செலுத்தியும் வலி குறையவில்லை என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் உறவினர்கள் உடனடியாக அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் கூறிய போது பணியில் இருந்த மருத்துவர் கார்த்திகேயன், நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வைத்து அலைக்கழித்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவரின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவரிடம் கேள்வி எழுப்பிய போது இங்கு இப்படித்தான்.
கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிச்சென்ற லாரி மோதி ராணுவ வீரரின் மனைவி பலி
நான் ஒரு எலும்பு மருத்துவர் என்னால் இதற்கெல்லாம் சிகிச்சை அளிக்க முடியாது. எதையாவது ஒரு ஊசியை குத்தி இவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள் அல்லது நான் பரிந்துரைக்கிறேன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என ஏளனமாக கூறியுள்ளார். மேலும் இந்த காய்கறி கடை சரியில்லை என்றால் அருகாமையில் உள்ள காய்கறிக் கடைக்கு சென்று காய்கறிகளை வாங்குவதில்லையா? அதேபோலத்தான் இந்த மருத்துவமனையில் இப்போது மருத்துவர் இல்லை நீங்கள் வேறு மருத்துவமனையில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என நோயாளிடமும் நோயாளி உறவினர்களிடமும் ஏளனமாக மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
500 இளநீரை பல்லால் உரித்தும், தலையால் உடைத்தும் பக்தர்கள் விநோத வழிபாடு