தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்ததையடுத்து பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்தது. இதன்காரணமாக டெங்கு, வைரஸ் போன்ற காய்ச்சல்கள் வேகமாக பரவியது. தமிழக அரசு சார்பாக சுகாதார பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் 400க்கும்மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வந்தது. இதற்காக 910 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் வீடு, வீடாக சென்று சென்று சுகாதார பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் டெங்கு ஒழிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் 50 பணியாளர்கள் மெத்தனம் காட்டியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பணிநீக்கம் செய்து ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். சரிவர பணிகளை மேற்கொள்ளவில்லை எனில் மேலும் பலர் நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த கொடூரன்..! போக்சோவில் அதிரடி கைது..!