சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது வீட்டின் அருகே கூலித் தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று இருக்கிறது. கூலித்தொழிலாளியின் குடும்பத்துடன் ரமேஷ் நெருங்கி பழகி வந்துள்ளார். தினமும் குழந்தையை தூக்கி கொஞ்சும் ரமேஷ், தனது வீட்டிற்கும் கூட்டிச்செல்வார் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த சிலநாட்களாக குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என்று அஞ்சிய பெற்றோர், குழந்தையை சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், பிறப்புறுப்பில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தனர். அதைக்கேட்டு செய்வதறியாது திகைத்த குழந்தையின் பெற்றோர், தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணையை தொடங்கினர். அதில் கூலித்தொழிலாளி வீடு அருகே வசிக்கும் ரமேஷ் சிலநாட்களுக்கு முன்பு குழந்தையை கவனித்துக்கொள்வதாக வாங்கிச்சென்று பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து ரமேஷை கைது செய்த காவலர்கள், போக்சோவில் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:  பெற்ற மகனை அடித்துக்கொன்ற கொடூர தந்தை..! குடிபோதையில் வெறிச்செயல்..