Asianet News TamilAsianet News Tamil

பலமுறை எச்சரித்தும் திருந்தாத மகள்; ஆத்திரத்தில் கத்தியால் வெட்டிய தந்தை

வாணியம்பாடி அருகே பெற்ற மகளை தந்தையே கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

31 year old lady's hand cut by her father in tirupattur district vel
Author
First Published Sep 25, 2023, 11:03 AM IST | Last Updated Sep 25, 2023, 11:02 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி (வயது 65). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவி மீனா. இவரது மகள் சித்ரா (வயது 31). சித்ராவுக்கும், அவரது கணவர் தனசேகரனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா கணவரை பிரிந்து தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சித்ராவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி தந்தையுடன் சித்ரா தகறாரில்  ஈடுபட்டு வந்துள்ளார். தந்தை ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கும் நிலையில் சித்ராவிடம் இதுகுறித்து பலமுறை எச்சரித்துள்ளார்.

நிரம்பும் தருவாயில் தேனி மாவட்ட அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி

அந்த வகையில் சம்பவத்தன்றும் சித்ராவுக்கும், அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மது போதையில் இருந்த தந்தை வீராசாமி மகள் சித்ராவை கத்தியால் வெட்டி உள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அவரது தாயார் மீனா மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். 

சிலிக்கா ஜெல் கலந்த ஜூஸ்: 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!

இதனைத் தொடர்ந்து அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அம்பலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வீராசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடி அருகே மகளின் தகாத உறவை கண்டித்த தந்தை ஆத்திரத்தில் தன் மகளையே கத்தியால் வெட்டியதால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios