நிரம்பும் தருவாயில் தேனி மாவட்ட அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது மேலும் மஞ்சளார் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்ட உள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி.

Farmers are happy as the dams in Theni are filling up vel

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்திற்கும் உள்ள சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளார் அணை. கடந்த இரண்டு மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனதால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர துவங்கியது. சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126.28 அடியில் அணையின் நீர்மட்டம் 78 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் 5 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்து 83.31 அடியா  உள்ளது. 

அண்ணாநகரில் போட்டு தாக்கிய மழை..! இன்னைக்கு எங்கே குறி வைத்து இருக்குனு தெரியுமா.? வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்

அதேபோல் மஞ்சளார் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் அணையின் நீர்மட்டம் 51.80 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்ட உள்ளது. மேலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிலிக்கா ஜெல் கலந்த ஜூஸ்: 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios