13 வருடங்களாக பார்க்க வராத தந்தை; ஏக்கத்தில் சிறுமி எடுத்த விபரீத முடிவு - குடும்பத்தினர் சோகம்
வாணியம்பாடி அருகே 13 வருடங்களாக தந்தை பார்க்க வராத நிலையில் ஏக்ககத்தில் இருந்த 10 ஆம் வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பானேரி பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. கட்டிடம் வேலை செய்து வருகிறார். இவருடைய 15 வயது மகள் நிம்மியப்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் வழக்கம் போல் கலகலப்பாக பேசியுள்ளார்.
பின்னர் வீட்டிற்குள் சென்ற மாணவி அங்கு இருந்த ஒரு துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தாய் சரண்யா கட்டிட வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் தூக்கில் தொங்கியவாறு சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
கள்ளக்காதலனுக்காக தொழிலதிபரை போட்டுத்தள்ளிய மனைவி; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் சிறுமியின் தாய் சரண்யா கணவர் செந்தமிழ் செல்வன் என்பவரை கடந்த 2010 ஆண்டு முதல் பிரிந்து கடந்த 13 வருடங்களாக தன் மகளுடன் தனிமையில் வசித்து வருவதாகவும், தன் தந்தை தன்னை பார்க்க வரவில்லை என்ற ஏக்கதிலும் மன அழுத்தத்தில் சிறுமி தற்கொலை செய்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் சீறப்பாய்ந்த காளை; தெறித்து ஓடிய தொண்டர்கள்; நொடிப்பொழுதில் கட்டுப்படுத்திய அண்ணாமலை
மேலும் வீட்டு பாடம் எழுதும் நோட்டு புத்தகத்தில் அம்மா மன்னித்து விடுங்கள் என்று சிறுமி ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வாணியம்பாடி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.