கார் ஓட்டுநருக்காக தொழிலதிபரை போட்டுத்தள்ளிய மனைவிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கள்ள காதலால் புதுச்சேரியில் 2017ம் ஆண்டு தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி பூமியான்பேட்டை ராகவேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்பிரசாத் (வயது 40). இவரது மனைவி ஜெயதி பிரசாத் (37). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். விவேக்பிரசாத் கட்டிடம் கட்டும் ஒப்பந்தப்பணி தொழிலை மேற்கொண்டு வந்தார். அவரிடம் மேற்பார்வையாளராகவும், ஓட்டுநராகவும் புதுச்சேரி சுல்தான்பேட்டையைச் சேர்ந்த பாபு என்ற ஷேக்பீர்முகம்மது (40) பணியாற்றினார்.
இந்நிலையில், ஓட்டுநருக்கும், ஜெயதி பிரசாத்துக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாபுவும், ஜெயதி பிரசாத்தும், கணவரைக் கொல்லத் திட்டமிட்டு கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் புதுச்சேரி அருகேயுள்ள பூத்துறை பகுதியில் கட்டிடப்பணியை பார்க்கச் சென்ற விவேக்பிரசாத்தை உடன் சென்ற ஷேக்பீர்முகம்மது கத்தியால் குத்தி கொன்று அங்குள்ள பள்ளத்தில் புதைத்துவிட்டார்.
கூட்டத்தில் சீறப்பாய்ந்த காளை; தெறித்து ஓடிய தொண்டர்கள்; நொடிப்பொழுதில் கட்டுப்படுத்திய அண்ணாமலை
இதன் பின்னர், மறுநாள் கணவரைக் காணவில்லை என ஜெயதி பிரசாத் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அப்போதைய ரெட்டியார்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமணி விசாரித்தபோது, விவேக்பிரசாத் கொல்லப்பட்டதும், அதற்கு அவரது மனைவியே உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதனையடுத்து பாபு என்ற ஷேக்பீர்முகமது, ஜெயதிபிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
விளையாட்டை வேடிக்கை பார்க்க வந்த நபர் துடி துடிக்க அடித்து கொலை; போதையில் இளைஞர்கள் வெறிச்செயல்
அவர்கள் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பாபு என்ற ஷேக்பீர்முகம்மதுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அதைக்கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் தண்டனை விதித்து நீதிபதி செந்தில்நாதன் உத்தரவிட்டார். மேலும், ஜெயதிபிரசாத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதமும், அதைக் கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார்.
தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கணவனை கொன்ற வழக்கில் மனைவிக்கும், கள்ளகாதலனுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.