தூத்துக்குடியில் விஷவாயு அட்டாக்; இருவர் பலி, இருவர் மருத்துவமனையில் அனுமதி
தூத்துக்குடியில் உறை கிணற்றை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழந்த நிலையில், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் அடுத்த ஆனந்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 60). இவரது வீட்டில் 18 அடி ஆழமும், 3 அடி அகலமும் உள்ள உறைகிணறு உள்ளது. இந்த உறைகிணற்றின் அருகிலேயே மனித கழிவுகளை தேக்கி வைக்கும் செப்டிக் டேங்கும் இருந்துள்ளது. இதனால் செப்டிக் டேங்கில் இருந்த கழிவுகள் உறைகிணற்றில் கலந்து, தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உறைகிணற்றை சுத்தம் செய்ய திட்டமிடப்பட்டது.
நிலசரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நிதி உதவி அளித்த நடிகர், நடிகைகள்
அதன்படி இன்று பகல் நேரத்தில் வீட்டின் உரிமையாளர் கணேசன், ஆறுமுகநேரியைச் சேர்ந்த மாரிமுத்து ஆகிய இருவரும் இணைந்து உறை கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கிணற்றில் இருந்த நீர் மோட்டார் மூலமாக வெளியேற்றப்பட்டு கணேசன் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். கணேசனிடம் இருந்து எந்தவித அழைப்பும் வராததால் மாரிமுத்துவும் உறைகிணற்றில் இறங்கி உள்ளார். இருவரிடம் இருந்தும் எந்தவித அசைவும் காணப்படாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்தனர்.
வெளியூர்காரனுக்கு இங்க என்னடா வேலை? காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற நபர் அடித்து கொலை
அதன்பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த இருவர் கிணற்றுக்குள் பார்த்தபோது ஏற்கனவே சென்ற இருவரும் மூச்சு பேச்சின்றி இருந்துள்ளனர். மேலும் புதிதாக கிணற்றுக்குள் இறங்கியவர்களும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களை மேலே இருந்தவர்கள் உடனடியாக கிணற்றில் இருந்து வெளியேற்றினர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உயிரிழந்த இருவரும் மீட்கப்பட்டனர். மேலும் மயக்கடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.