கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்? நோயாளிகள் அவதி

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

patients request more 108 ambulance service for kovilpatti government hospital in thoothukudi district vel

தூத்துக்குடி மாவட்டத்தில் 2வது பெரிய நகரமாக கோவில்பட்டி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோவில்பட்டி நகரத்தினை சுற்றி தீப்பெட்டி, பட்டாசு ஆலைகள் ஏரளமாக உள்ளன. இதை கருத்தில் கொண்டு தான் கோவில்பட்டியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் மற்றும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தீப்பெட்டி, பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் ஏற்பட்டாலும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கோவில்பட்டியில் இரண்டு 108 ஆம்புலன்ஸ்களும், தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூரில் ஒரு 108 ஆம்புலன்ஸ்ம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அவசர சிகிச்சைக்காக தான் 108 ஆம்புலன்ஸ் என்று இருந்த போதிலும், கோவில்பட்டி அரசு மருத்துமனையில் எவ்வித மேல்சிகிச்சைக்கும் நோயாளிகளை தூத்துக்குடி, நெல்லை, மதுரையில் உள்ளிட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்கள் தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

“சாமி கேப்டன் நல்லா இருக்கனும்” விஜயகாந்துக்காக கடவுளுடன் பாசப்போராட்டம் நடத்தும் 5 வயது மழலை

இதனால் ஒரு ஆம்புலன்ஸ் சென்று வர குறைந்தது 4 மணிநேரமாகிறது. இந்த நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டாலோ அல்லது யாருக்காவது அவசர சிகிச்சை என்றாலும் வெளியூர்களில் இருந்து தான் 108 ஆம்புலன்ஸ் வர வேண்டிய சூழ்நிலை இருப்பதால், சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கமால் பலர் உயிரிழந்து வருகின்றனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ஆம்புலன்ஸ்கள் காட்சி பொருளாக ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில வாகனங்கள் மருந்துகள் ஏற்றி செல்வதற்கும், ஊழியர்களின் சொந்த தேவைகளுக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் நாலாட்டின்புதூரில் பயன்படுத்தப்பட்டு வந்த 108 ஆம்புலன்ஸ், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக கோவில்பட்டிக்கு 108 ஆம்புலன்ஸ் வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் இருக்கின்ற 108 ஆம்புலன்சினை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கோவில்பட்டி மருத்துவமனைக்கு கூடுதல் ஆம்புலன்ஸ்களை ஒதுக்க வேண்டும், அதே போன்று பயன்பாட்டில் உள்ள ஆம்புலன்ஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios