Asianet News TamilAsianet News Tamil

ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பயணிகள் சென்னை செல்ல ஏற்பாடு

ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Passengers rescued at Srivaikuntam railway station are arranged to go to Chennai sgb
Author
First Published Dec 19, 2023, 9:15 PM IST

ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட செந்தூல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருசெந்தூரில் இருந்து சென்னையை நோக்கி ஞாயிறு இரவு 800 பயணிகளுடன் புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தொடர் கனமழை காரணமாக பயணத்தைத் தொடர முடியாமல் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் ஶ்ரீவை ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் முயற்சியை ரயில்வே தொடங்கியது.

திங்கட்கிழமை வரை 800 பயணிகளில் 300 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 500 பயணிகள் ரயில் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ஹெலிகாப்டர் மூலம் உணவும் குடிநீரும் விநியோகிகப்பட்டது. இன்னு உள்ளூர் மக்களே பயணிகளுக்கு உணவும் குடிநீரும் வழங்கியுள்ளனர்.

வெள்ளம் வடியாததால் தூத்துக்குடியில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Passengers rescued at Srivaikuntam railway station are arranged to go to Chennai sgb

கனமழை தொடர்ந்து பெய்துவந்ததால், சாலையில் உடைப்பு ஏற்பட்டு பயணிகளை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இன்று மழை வெறித்திருப்பதால் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதுவரை மீட்கப்பட்ட பயணிகள் சுமார் 2 கி.மீ. நடந்தே அருகிலுள்ள கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, 6 பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு குழந்தைகள் மற்றும் முதியோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.

விரைவில் வாஞ்சி மணியாச்சி வந்திருக்கும் அனைத்து பயணிகளும் சிறப்பு ரயில் மூலம் சென்னை நோக்கி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ரயில்வே சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி: நெல்லை, தூத்துக்குடியில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Follow Us:
Download App:
  • android
  • ios