காலம் ரொம்ப கெட்டு பொயிருக்கு; பசங்கள முறையா கண்காணிங்க - அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தற்போதைய காலத்தில் பெற்றோர் தங்களது பிள்ளைகளை முறையாக கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தமிழக முழுவதும் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வில்வமரத்துப்பட்டி கிராமத்தில், தமிழக சமூக நலத்துறை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர். இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் பொதுமக்களிடம் பேசிய போது, இப்ப காலம் ரொம்ப மோசமா கெட்டுப்போயிருக்குது.
குடும்ப வறுமையால் பணிக்கு சென்ற இளம் பெண் பட்ட பகலில் வெட்டி படுகொலை; ஒருதலை காதலால் வெறிச்செயல்
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆண், பெண் பசங்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். 18 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, பெண்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத தகுதியுடையவர்கள் அக்டோபர் 18-ம் தேதிக்குள் மீண்டும் மேல்முறையீடு செய்து பயன்பெறலாம் என்றார்.
தரமான சாலை கேட்ட மக்கள்; ஆபாச வார்த்தைகளால் திட்டி அராஜகம் செய்த ஊராட்சி தலைவர்
மேலும் இந்நிகழ்வில் வேளாண்மை துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு தங்களின் துறைகள் மூலமாக வழங்கப்படும் சேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. பின்னர் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த தானியங்கள், விதைகள், பழங்கள், விவசாய பொருட்கள், இயற்கை உணவுகள் அடங்கிய கண்காட்சியை கண்டு ரசித்தார்.