Asianet News TamilAsianet News Tamil

தரமான சாலை கேட்ட மக்கள்; ஆபாச வார்த்தைகளால் திட்டி அராஜகம் செய்த ஊராட்சி தலைவர்

தேனி மாவட்டத்தில் தற்போது போடப்படும் தார் சாலையை ஒரு இன்ச் உயர்த்தி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பொதுமக்களை ஊராட்சி தலைவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

panchayat president lashing out at the villagers who asked them to build a quality road has created a sensation in theni vel
Author
First Published Oct 2, 2023, 4:12 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் ஊராட்சியில்  தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சேதம் அடைந்த சாலைகளை புதுப்பிப்பதற்காக 80 லட்சம் மதிப்பீட்டில் வாய்க்காம்பட்டி முதல் திருமலாபுரம் விளக்கு வரை தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

அப்போது தார் சாலை அமைக்கும் பணிகளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நிறுத்தி தங்கள் பகுதிக்கு ஒரு இன்ச் கூடுதலாக சாலை அமைக்க வேண்டி ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் பொதுமக்களின் கோரிக்கை படி ஒரு இன்ச் சேர்த்து தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

விமான நிலையத்திற்கு எதிராக அறவழியில் போராடும் மக்கள் மீது வழக்கா? டிடிவி தினகரன் கண்டனம்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது அமச்சியாபுரம் ஊராட்சி தலைவர் பஞ்சமணி சாலை பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்து சாலை பணிகளை தடுத்து நிறுத்தியது யார் என்று பொது மக்களை ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்தார். பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து ஒரு இன்ச் கூடுதலாக தார் சாலை அமைக்கப்பட்ட பின்பும் ஊராட்சி தலைவர் பஞ்ச மணி பொதுமக்களிடம் குறைகள் இருந்தால் கூற வேண்டும் அதை விட்டுவிட்டு பணிகளை தடுக்கக்கூடாது என்றும் பணிகளை தடுத்து அவர்கள் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளாமல் விட்டு விட்டு சென்றால் என்ன செய்வீர்கள்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

கூடலூரில் அட்டகாசம் செய்த காட்டு யானையை அசால்ட்டாக விரட்டிய வன ஊழியர்

ஊர் மக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்படும் சாலைகளில் பொதுமக்கள் கருத்து கூற கூடாதா என்று ஊர் மக்கள் கேள்வி எழுப்பினர். மேலும் சாலை பணிகள் குறித்து பொதுமக்களின் கோரிக்கையை கூட மதிக்காமல் ஊர் மக்களை ஒருமையில் பேசியது மட்டுமின்றி பெண்களை ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios