அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான லஞ்ச ஒழிப்பு வழக்கில் தங்களையும் இனைத்துக்கொள்ள அமலாக்கத்துறை மனு!
வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 4.90 கோடி மதிப்பு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது
கடந்த 2001-2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார் அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி மகன்கள் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி செல்வம் அடுத்த விசாரணை ஜூலை 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக மனுதாரர்களுடன் இணைக்க கோரி அமலாக்க பிரிவினர் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை 80% முடிவடைந்துள்ளதால் இதில் அமலாக்க துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்பு துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
சீல் வைக்கப்பட்ட கடையில் மதுபானங்களை திருடிய ஊழியர்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி
இந்நிலையில் அமலாக்க துறையின் மனு மீது வருகிற அடுத்த மாதம் 19ம் தேதி அன்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி தனது உத்தரவை தெரிவிக்க உள்ளார்.
அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ள விபரம் தற்போது தான் வெளியில் தெரிய வந்துள்ளது இதனால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் ஜனநாயகத்திற்கு புதிய வேகம் கிடைக்கும் - வானதி சீனிவாசன்