Asianet News TamilAsianet News Tamil

ஓசியில் ஜாங்கிரி கேட்டு தகராறு; கடை ஊழியரை புரட்டி எடுத்த போதை ஆசாமிகள்

தூத்துக்குடியில் வீ இரோட்டில் அமைந்துள்ள சிப்ஸ் கடையில் ஊழியர் ஜாங்கிரி தராததால் மதுபோதையில் இருந்த இரண்டு நபர்கள் கடைக்குள் புகுந்து  ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

A scene of youths assaulting a chip seller in Thoothukudi under the influence of alcohol has created a sensation vel
Author
First Published Mar 11, 2024, 5:10 PM IST

தூத்துக்குடி வீ இ சாலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த முருகன் என்பவர் ஸ்ரீ சிந்து என்ற பெயரில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் தூத்துக்குடி அருகே உள்ள பழைய காயல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த கடை அருகே அரசு மதுபான கடை ஒன்று செயல்படுகிறது. இதனால் அங்கு மது அருந்திவிட்டு வரும் நபர்கள் அவ்வப்போது இந்த கடைக்கு சென்று பணம் கொடுக்காமல் கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் சிப்ஸ் மற்றும் இனிப்பு வகைகளை கேட்டு தொந்தரவு செய்வது வாடிக்கையாக இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு அதே போன்று அரசு மதுபான கடையில் மது அருந்திவிட்டு வெளியே  மது போதை தலைக்கேறிய நிலையில் வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் சிப்ஸ் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியரிடம் பணம் கொடுக்காமல் ஜாங்கிரி கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர் பணம் இல்லாமல் ஜாங்கிரி கொடுக்க முடியாது உரிமையாளர் திட்டுவார் என கூறியுள்ளார்.

ஒரே நாளில் ரூ.110 கோடி மதிப்பில் போதைப் பொருள் பறிமுதல்; இனியும் தூங்காதீர்கள் - திமுகவுக்கு அண்ணாமலை அறிவுரை

இதைத்தொடர்ந்து போதையில் இருந்த நான்கு பேரும் ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதனால் ஊழியருக்கும், போதை ஆசாமிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போதையில் இருந்த இரண்டு நபர்கள் கடைக்குள் புகுந்து ஊழியர் குமாரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த வியாபாரிகள் சிலர் உடனடியாக வந்து ஊழியர் குமாரை மதுபோதையில் இருந்த நபர்களிடம் இருந்து காப்பாற்றினர்.

டெல்டா மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கோலாட்டம்; 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று அசத்தல் நடனம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து காயம் அடைந்த ஊழியர் சிகிச்சைக்காக  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் மற்றும் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் ஆகியோர் தென்பாகம் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய மது போதை கும்பலை கைது செய்ய கோரி புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடியில் மது போதையில் இருந்த கும்பல் ஜாங்கிரி தராததால் கடை ஊழியரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios