Asianet News TamilAsianet News Tamil

புஷ்பா பட பாணியில் லாரியில் ரகசிய அறை; 600 கிலோ கஞ்சா கடத்திய மத போதகர் உள்பட 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லாரியில் ரகசிய அறை அமைத்து 600 கிலோ கஞ்சாவை கடத்திய மதபோதகர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

600 kg smuggling ganja seized by government officers at kovilpatti in thoothukudi district
Author
First Published Aug 22, 2023, 8:55 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாறு சுங்கச்சாவடி பகுதியில் புகையிலை மற்றும் கஞ்சா ஒழிப்பு தனிப்படை காவல்துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சென்னை பதிவு எண் கொண்ட மினி கண்டெய்னர் லாரியை நிறுத்தி தனிப்படை காவல்துறையினர் சோதனை மேற்கொள்ள முயன்றனர். 

அப்போது ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறியதை அடுத்து தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில் ரகசிய அறை அமைத்து  தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து 3 பேரையும்  பிடித்து கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

சபாநாயகருடன் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடும் வாக்குவாதம்; புதுவையில் பரபரப்பு

விசாரணையில் தூத்துக்குடிக்கு கஞ்சாவை கொண்டு செல்ல முற்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த (மத போதகர்) ஜான் அற்புத பாரத்  மற்றும் பாண்டிச்சேரி மாநிலம் ஏனாம்  பகுதியைச் சேர்ந்த சக்தி பாபு( 39) தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த விஜயகுமார் (36) உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து மினி கண்டெய்னர் லாரியில் 300 பாக்கெட்டுகளில் கொண்டுவரப்பட்ட 600 கிலோ கஞ்சா மற்றும் மினி கண்டெய்னர் லாரியையும் தனிப்படை பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மதுவிலக்கு டிஎஸ்பி சிவசுப்பு  மற்றும் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் உள்ளிட்டோர் தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் போலீசை ஓட ஓட விரட்டிய கஞ்சா ஆசாமிகள்; லத்தி இருந்தும் ஓட்டம் பிடித்த காவலர்

இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவில்பட்டி பகுதியில் 600 கிலோ அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios