பெற்றோரிடம் நைசாக பேசி ஒன்றரை வயது குழந்தை கடத்தல்; திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பரபரப்பு

திருச்செந்தூர் கோவில் அருகே பெற்றோருடன் நட்பாக பேசுவது போல் பழகி ஒன்றரை வயது குழந்தையை 40 வயது பெண் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

40 years old lady theft 1 year old baby in tiruchendur temple in thoothukudi district vel

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துராஜ், மதி தம்பதியர். முத்துராஜ் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ராஜேஸ்வரி, ராஜசேகர், ஸ்ரீஹரிஸ் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். முத்துராஜ்க்கு உடல்நலம் சரியில்லாததால் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதற்காக கடந்த மாதம் 28ம் தேதி குலசேகரப்பட்டினம் கோவிலுக்கு தனது கடைசி குழந்தை ஸ்ரீஹரிசுடன் வந்து கோவில் வளாகத்தில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் தனது கணவருக்கு மனநிலை சரியில்லை, அதனால் கோவிலில் மாலை அணிந்து விரதம் இருப்பதாகக் கூறி 40 வயது பெண் ஒருவர் கோவில் வளாகத்தில் அறிமுகமாகியுள்ளார். மேலும் நாங்கள் திருச்செந்தூருக்கு துணி துவைப்பதற்காக போகிறோம் என்று சொன்னபோது அந்த பெண்மணியும் எனக்கும் துணி துவைக்க வேண்டி உள்ளது. நானும் வருகிறேன் என்று சொல்ல, முத்துராஜ், மதி மற்றும் அந்தப் பெண் ஆகிய மூன்று பேரும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து மதியம் சுமார் 12 மணிக்கு துணி துவைப்பதற்காக பாத்ரூமுக்குள் சென்றுள்ளனர். 

ஆய்வின் போது திடீரென கீழே விழுந்த அதிகாரி; நூலிழையில் தப்பிய அமைச்சர் ஏ.வ.வேலு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது அந்த பெண்மணி நான் குழந்தையை வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி குழந்தையை அப்பெண் வாங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்தபோது குழந்தையுடன் அப்பெண் மாயமானார். நீண்ட நேரமாகியும் குழந்தை கிடைக்காத நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மாணவர்களால் 50 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட தேக்கு மரங்கள்; அசால்டாக வெட்டி கடத்திய தலைமை ஆசிரியர் 

குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அனைவரும் தங்களது குழந்தைகளையும், உடமைகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios