Asianet News TamilAsianet News Tamil

தி.மலையில் 4 ஏடிஎம்.களில் கொள்ளை.. இரவு நேர பணியில் ஈடுபடாத போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை..!

பணம் நிரப்பும் நிறுவனத்தை சார்ந்த நபர்கள் உதவியோடு மட்டும் தான் இந்த கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி இருப்பது கடந்த வழக்குகளில் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பெர்டோ வகை ஏடிஎம் மிஷின்கள் இருக்கும் மையங்களை மட்டுமே கொள்ளையர்கள் குறி வைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Tiruvannamalai ATM Robbery.. 6 Policemen Transferred
Author
First Published Feb 14, 2023, 8:56 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 4 இடங்களில் நிகழ்ந்த ஏடிஎம்  கொள்ளை சம்பவம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 காவலர்கள் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

திருவண்ணாமலையில் மாரியம்மன் கோயில் 10-வது வீதியில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம், தேனிமலை பகுதியில்  எஸ்.பி.ஐ ஏடிஎம், போளூர் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் செல்லும் பாதையில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம், கலசப்பாக்கத்தில் உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் உள்ளிட்ட 4 இடங்களில் அடுத்தடுத்து ரூ.73 லட்சம் ரூபாய் கொள்ளை நடந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க;- ஏடிஎம் இயந்திரம் பத்தி நல்ல தெரிஞ்சவங்க தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்காங்க.. ஐஜி கண்ணன் பகீர்.!

Tiruvannamalai ATM Robbery.. 6 Policemen Transferred

இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏடிஎம் இயந்திரம் குறித்து நன்கு தெரிந்தவர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், கேஸ் கட்டர்களை வைத்து எந்த அளவுக்கு வெட்ட வேண்டும் என்ற அடிப்படையில் ஏடிஎம் மிஷின்களை வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க போட்டோ போட்டி.. ஜல்லிக்கட்டு வீரர் கொலை.. வெளியான பகீர் தகவல்.!

Tiruvannamalai ATM Robbery.. 6 Policemen Transferred

அதன் பின்னர் கைரேகை எதுவும் சிக்கக் கூடாது என்பதற்காக தீயிட்டு கொளுத்தி விட்டு சென்றுள்ளனர். பணம் நிரப்பும் நிறுவனத்தை சார்ந்த நபர்கள் உதவியோடு மட்டும் தான் இந்த கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி இருப்பது கடந்த வழக்குகளில் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பெர்டோ வகை ஏடிஎம் மிஷின்கள் இருக்கும் மையங்களை மட்டுமே கொள்ளையர்கள் குறி வைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று  வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கூறியிருந்தார். 

இந்நிலையில் திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளை நடந்த விவகாரம் தொடர்பாக, 6 காவல்துறையினர் மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

* திருவண்ணாமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் மோகன், காவலர் வரதராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்.

* போளூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர்  தட்சிணாமூர்த்தி, காவலர்கள் சுததாகர், அருண் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம்.

* கலசப்பாக்கம் காவல்நிலைய எஸ்எஸ் பலராமன் உட்பட 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்படுவதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios