ஏடிஎம் இயந்திரம் பத்தி நல்ல தெரிஞ்சவங்க தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்காங்க.. ஐஜி கண்ணன் பகீர்.!

திருவண்ணாமலையில் மாரியம்மன் கோயில் 10-வது வீதி, தேனிமலை, போளூர் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் செல்லும் பாதை, கலசப்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் மையம் உள்ளிட்ட 4 இடங்களில் அடுத்தடுத்து ரூ.73 லட்சம் ரூபாய் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

People who are familiar with the ATM machine are involved in this robbery.. Kannan IG North Zone

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வட வெளிமாநிலத்தவர்கள் தான் என ஐஜி கண்ணன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் மாரியம்மன் கோயில் 10-வது வீதி, தேனிமலை, போளூர் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் செல்லும் பாதை, கலசப்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் மையம் உள்ளிட்ட 4 இடங்களில் அடுத்தடுத்து ரூ.73 லட்சம் ரூபாய் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க போட்டோ போட்டி.. ஜல்லிக்கட்டு வீரர் கொலை.. வெளியான பகீர் தகவல்.!

People who are familiar with the ATM machine are involved in this robbery.. Kannan IG North Zone

இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் போலீசாருடன் இணைந்து மாநில எல்லைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் தீவிர வாகனச் சோதனை செய்யவும், கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் தீவிர சோதனை நடத்தவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கொள்ளை நடந்த ஏடிஎம்களை ஐஜி கண்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

People who are familiar with the ATM machine are involved in this robbery.. Kannan IG North Zone

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 4 இடங்களில் ஏடிஎம் திருட்டு நடைபெற்றுள்ளது. கியாஸ் கட்டர் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தங்களை அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்திற்கு தீ வைத்துள்ளனர். இதில், கேமிரா மற்றும் ஹார்ட் டிஸ்குகள் சேதமடைந்துள்ளன. விசாரணைத் தொடக்க நிலையில் உள்ளது. வட வெளிமாநிலத்தவர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சொல்ல விரும்பவில்லை. கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  பிரபல ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கரன் அதிரடி கைது.. என்ன காரணம் தெரியுமா?

People who are familiar with the ATM machine are involved in this robbery.. Kannan IG North Zone

ஏடிஎம் இயந்திரம் குறித்து நன்கு தெரிந்தவர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏடிஎம் மெக்கானிக்காகக் கூட இருக்கலாம். நான்கு ஏடிஎம்களில் சேர்ந்து ரூ.70 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios