கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க போட்டோ போட்டி.. ஜல்லிக்கட்டு வீரர் கொலை.. வெளியான பகீர் தகவல்.!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்குவாரியில் ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டனர். கை, கால்கள் கட்டப்பட்டும், உடலில் கல்லை கட்டியும் கிணற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டதால் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
திண்டுக்கல்லில் கள்ளக்காதல் விவரகாரத்தில் ஜல்லிக்கட்டு வீரர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கல்லால் கட்டி உடலை கல்குவாரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்குவாரியில் ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டனர். கை, கால்கள் கட்டப்பட்டும், உடலில் கல்லை கட்டியும் கிணற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டதால் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதையும் படிங்க;- சென்னையில் மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற ஐடெக் விபச்சாரம்.. அரைகுறை ஆடைகளுடன் 5 இளம்பெண்கள் சிக்கினர்.!
அவர் அணிந்திருந்த ஆடையில் ராம் பாய்ஸ் கபடி குழு காங்கேயம் என எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த நபர் கபடி வீரராக இருப்பார் என சந்தேகப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திருச்சியை சேர்ந்த மாடுபிடி வீரர் மணி(23) என்பது தெரிய வந்தது. இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், கருங்குளத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும், கரூரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அந்த பெண்ணுடன் மணியும் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு நிலவி வந்துள்ளது.
இதையும் படிங்க;- நைட்டானாவே போதையில் வந்து ஒரே டார்ச்சர்.. வலி தாங்க முடியாமல் ஆத்திரத்தில் கணவனை போட்டு தள்ளிய மனைவி..!
இந்நிலையில், வேலை இல்லாமல் இருந்த மணிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி குஜிலியம்பாறைக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அங்கு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மணியை தாக்கி உடலில் கல்லை கட்டியும், கை ,கால்களை கட்டியும் வீசிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெண் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணைமேற்கு வருகின்றனர்.