பள்ளி முதல்வர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய ஏடிஜிபியிடம் மனு
திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஏடிஜிபி சங்கரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை அபாய மண்டபம் அருணாசலம் மகா அன்னதான மடத்தை நடத்தி வருபவர் கோ. அருணாசலம். இவர் நேற்று திருவண்ணாமலை ஏ. எஸ். மஹாலில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்ற தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் சங்கரிடம் கொடுத்த புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவன். ஆன்மீகப் பணி செய்து வருகிறேன்.
கடந்த ஆண்டு என் மகள் பவேஷ்வரியை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்க விண்ணப்பித்திருந்தேன். கேந்திரியா வித்யாலயா பள்ளியின் முதல்வர் ரீமா ஸ்டெல்லா ஜெயச்சந்திரன் கேட்டுக்கொண்டதன் பேரில் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள தேசிய கொடிகள் வாங்கி கொடுத்தேன். அதன்பிறகு பள்ளி முதல்வர், என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றினால் எனது மகளை சேர்த்துக் கொள்வதாக கூறினார். ஆனால் நான் செய்யாததனால், என் மகளுக்கு பள்ளியில் சேர்க்கை வழங்கப்படவில்லை.
பொதுத்தேர்வில் 100க்கு 138 மதிப்பெண் பெற்றும் தோல்வியடைந்த மதுரை மாணவி
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேட்டு இன்று வரை பள்ளி நிர்வாகம் தகவலை வழங்கவில்லை. சாதி ரீதியான நோக்கத்தில் அவர் செயல்பட்டுள்ளார் என்பதால் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
தங்கும் விடுதியில் பெண் சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை - காங்கிரஸ் மாவட்ட தலைவர் கைது