கல்வி தான் அனைத்திற்கும் அடிப்படை; கல்வி வளர்ச்சி பெற்ற நாடு செழிப்பாக இருக்கும் - அமைச்சர் ஏ.வ.வேலு
சிறுவயதில் பள்ளி காலகட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டிகளில் பங்கேற்றதால் தான் தமிழ்நாட்டில் அடையாளம் காட்டப்படும் அமைச்சராக தான் வளர்ந்ததாகவும், இதற்கு ஆசிரியர்கள் தான் காரணம் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராதாபுரம், காம்பட்டு, வாணாபுரம், பேராயம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 2 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்கள் மற்றும் புதிய நியாய விலை கடைகள் ஆகியவற்றினை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு திறந்து வைத்தார். மேலும் சுமார் 3076 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளையும் பொதுப்பணித்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு கிராமப்புற பொருளாதாரம் முன்னேறினால் தான் தமிழ்நாடு முன்னேறும். மாநிலங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும். கிராமப்புற பொருளாதாரம் முன்னேற வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையானது கல்வி, கல்வி வளர்ச்சி பெற்ற நாடு செழிப்பாக இருக்கும். கல்வி கற்றால் தான் மக்கள் பண்பாடடோடு வளருவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுக்கிறார்களோ அப்படித்தான் மாணவர்கள் வளருவார்கள். அதற்கு உதாரணம் என்னையே நான் சொல்கிறேன்.
கந்தர்வகோட்டை புனித செபஸ்தியார் ஆலய தை தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
குறிப்பாக சிறுவயதில் பள்ளி காலகட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டிகளில் பங்கேற்றதால் தான் தமிழ்நாட்டில் அடையாளம் காட்டப்படும் அமைச்சராக தான் வளர்ந்து உள்ளேன். இதற்கு பள்ளிக்கூடமும், பள்ளி ஆசிரியர்களும் தான் காரணம்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா; கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்
ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை நேரடியாக பள்ளிக்கூடத்தில் நாம் முறையாக படித்தோம் என்று சொன்னால் தமிழ்நாட்டில் அடையாளம் காட்டப்படும் நபர்களாக மாணவர்களாகிய நீங்கள் உயர முடியும் என்பதற்கு அமைச்சராகிய நானே ஒரு சாட்சி. மாணவர்கள் நன்றாக படித்தால் தான் வீட்டின் பொருளாதாரம் வளரும். அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மலரும். ஆகவே படிப்பு தான் மாணவர்களின் சமுதாயத்தை மேம்படுத்த உதவும் என்றும், மாணவர்களாகிய நீங்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை நன்றாக படித்து மருத்துவராகவோ, விஞ்ஞானியாகவோ, ஏன் மாவட்ட ஆட்சியராகவும் வர முடியும் என அமைச்சர் எ.வ.வேலு மாணவர்களிடையே நம்பிக்கை உரையாற்றினார்.