திருவள்ளூரில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,048ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் சற்று குறைந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,51,820ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,02,310 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,167ஆக அதிகரித்துள்ளது.


 
இந்நிலையில் சென்னைக்கு அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 7,573 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 475 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,048 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,335 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 134 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.