அட கடவுளே.. தாயை இழந்த பச்சிளம் குழந்தை.. தவறான ஊசியால் துடிதுடித்து உயிரிழந்த இளம்பெண்..!

அடுத்த 3 நாட்களில் வீட்டுக்குச் செல்ல இருந்த நிலையில் மருத்துவமனையில் இருந்த செவிலியர் வனிதாவுக்கு தவறுதலாக  taxim எனும் அலர்ஜி ஊசியை செலுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் வனிதாகவுக்கு திடீரென  மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார். 

thiruvallur government hospital wrong injection...women dead

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணுக்கு தவறான ஊசி செலுத்தியதால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிகிச்சை அளித்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே உள்ள சின்னக்களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப்(30). இவரது மனைவி வனிதா(26). வனிதா 2-வது பிரசவத்துக்காக கடந்த 20-ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

thiruvallur government hospital wrong injection...women dead

இந்நிலையில், அடுத்த 3 நாட்களில் வீட்டுக்குச் செல்ல இருந்த நிலையில் மருத்துவமனையில் இருந்த செவிலியர் வனிதாவுக்கு தவறுதலாக  taxim எனும் அலர்ஜி ஊசியை செலுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் வனிதாகவுக்கு திடீரென  மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார். இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக சென்னை எமும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி வனிதா பரிதாபமாக உயிரிழந்தார். 

thiruvallur government hospital wrong injection...women dead

இந்நிலையில், அவரது கணவர் பிரதீப் மற்றும் உறவினர்கள், செவிலியர் தவறான ஊசி செலுத்தியதால் தான் வனிதா உயிரிழந்தார். எனவே செவிலியர் மணிமாலா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து மேலும் இதுபோன்ற சம்பவம் வேறு யாருக்கும் நடைபெறாமல் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தனர்.  இதனையடுத்து, செவிலியர் மணிமாலாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios