திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,751ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 5,063 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், திருவள்ளூரில் இன்று 655 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,751ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 257ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை, 11,402 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மற்ற 3,437 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.