திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் கண்முன்னே தனியார் பள்ளி ஆசிரியை உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.    

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே செங்குன்றம் எம்.ஏ. நகர் நேதாஜி முதல் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி லதா (38). அம்பத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், காலை வழக்கம் போல லதா பள்ளிக்கு செல்வதற்காக தனது கணவர் பிரபுவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனர்.  

அப்போது, சோழவரத்தில் புழல் நோக்கி வந்துக்கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் லதா சாலையில் விழுந்தது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவர் பிரபு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.