ஆறு மணி நேர மின்வெட்டா..? அரசுக்கே அவமானம்..! கொந்தளிக்கும் திருவள்ளூர் மக்கள் ..!

திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி, பொன்னேரி. பொன்னேரி மின்கோட்டத்தில் கடந்த சில தினங்களாக தினமும் ஆறு, ஏழு மணிநேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

power cut... People in Tiruvallur

திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி, பொன்னேரி. பொன்னேரி மின்கோட்டத்தில் கடந்த சில தினங்களாக தினமும் ஆறு, ஏழு மணிநேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிகழ்வதாகக் கூறப்படுகிறது. கோடை வெயில் கொளுத்தும் நிலையில், இந்த மின்வெட்டால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளை மின்வெட்டு அதிகம் பாதிக்கிறது. இது அப்பகுதி மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

 power cut... People in Tiruvallur

இதுகுறித்து அப்பகுதிவாசியினர் கூறியதாவது: பொதுவாக கோடைகாலங்களில் தமிழகத்தின் மின்தேவை சுமார் 2000 மெகாவாட் கூடும். இதனால் மின்தேவையை சமாளிக்கக் கிராமப்புறங்களில் மின்வெட்டு நிகழ்வது வழக்கம். ஆனால் அதிகமாக இருக்காது. ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் என்ற அளவிலேயே இருக்கும். ஆனால் இப்பகுதியில் ஆறு, ஏழு மணிநேரம் மின்வெட்டு நிகழ்கிறது. அறிவிக்கப்படாத இந்த மின் வெட்டு பொதுமக்களை அதிகம் வாட்டுகிறது. power cut... People in Tiruvallur

இதுகுறித்து கேட்க பொன்னேரி மின்கோட்ட அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், முறையான பதில் கிடைப்பது இல்லை. தரமில்லாமல் மின்மாற்றிகளை நிறுவியதும், மின்மாற்றிகளை முறையாக பராமரிக்காததுமே மின்வெட்டுக்குக் காரணம் என்று தெரிகிறது. அறிவிக்கப்படாத இந்த மின்வெட்டு தமிழக அரசின் பெயரைக் கெடுப்பதாகத் தான் உள்ளது. அதிகாரிகள் இதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios