இப்போது எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால், பெற்றோருக்கும் மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 3 மகள்கள் இருக்கிறார்கள். நீ திருமணம் வேண்டாம் என்றால் அவர்களுக்கு எப்போதுதான் திருமணம் செய்ய முடியும். அதனால் நீ திருமணம் செய்துதான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

திருவள்ளூரில் பெற்றோர்கள் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருவள்ளூர் அடுத்த பன்னூர் அந்தோணியார்புரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி லில்லி. இவர்களுக்கு 5 மகள்கள். இவரது மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகள் விசாலி (26) கள்ளம்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளும் படி விசாலியிடம் அவரது பெற்றோர் கூறியுள்ளனர். அதற்கு அவர் இப்போது எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால், பெற்றோருக்கும் மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 3 மகள்கள் இருக்கிறார்கள். நீ திருமணம் வேண்டாம் என்றால் அவர்களுக்கு எப்போதுதான் திருமணம் செய்ய முடியும். அதனால் நீ திருமணம் செய்துதான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனால், மனமுடைந்த விசாலி கோபத்துடன் நேற்று வீட்டின் கதவை பூட்டி கொண்டு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதில் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று தீ காயங்களுடன் இருந்த விசாலியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் கூறியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் எடுத்து மேலே ஊற்றி தீ பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.