சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கும் முருகன் இட்லி கடை உரிமம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

முருகன் இட்லி கடை மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் தமிழ்நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட ஓர் உணவகம். இது இட்லிக் கடை என்ற பெயரைக் கொண்டிருப்பினும் இங்கே இட்லி தவிர சர்க்கரைப் பொங்கல் மற்றும் ஊத்தப்பமும் கிடைக்கும். இந்த உணவு விடுதிக்கு மதுரையில் உள்ள மூன்று கடைகளைத் தவிர சென்னையில் 23 கிளைகளும் சிங்கப்பூரில் இரண்டு கிளைகளும் உள்ளன. 1991-ம் ஆண்டு தமது பெற்றோர்கள் நடத்தி வந்த முருகன் காபி நிலையத்தை முருகன் இட்லி கடை என்று பெயர் மாற்றப்பட்டது. 

இந்நிலையில், உணவு தயாரிக்கப்படும் இடம் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னையில் இருக்கும் பல முருகன் இட்லி கடைகளுக்கு உணவுகள் எடுத்து செல்லப்படுகிறது. அதேபோல் உணவு தயாரிக்க தேவையான பொருட்கள் இங்கிருந்து எடுத்து செல்லப்படுகிறது. 

இந்நிலையில் சென்னை பாரிமுனையில் முருகன் இட்லி கடன் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கிளையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர் உணவில் புழு இருந்ததாக கூறப்படுகிறது. அதை தனது செல்போனில் படத்துடன் எடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் நேரடியாக சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதற்கு பிறகு உணவு தயாரிக்கப்படும் கூடத்திற்கும் சென்று ஆய்வை மேற்கொண்டனர். அதில், அவர்கள் பல்வேறுகள் விதிமுறைகளை மீறியதையடுத்து தற்போது உற்பத்தி கூடத்திற்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தற்காலிக தடை என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக முருகன் இட்லி கடையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.