திருவாரூர் அருகே 3 வயது பெண் குழந்தையுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே 3 வயது பெண் குழந்தையுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருவாரூர் மாவட்டம் கேக்கரையை சேர்ந்தவர் செல்வம் (38) கொத்தனார். இவரது மனைவி கோமதி (33), இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நாகஸ்ரீ (7), நவிஸ்ரீ (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த கோமதி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். 

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில தனது மகள் நவிஸ்ரீயுடன் ரயில் தண்டவாளம் பகுதிக்கு சென்று சென்னையில் இருந்து மன்னார்குடி வந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்தனர். இதில், உடல் சிதறி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.