பெற்றோருக்கு தெரியாமல் கோயிலில்  காதலியை திருமணம் செய்த காதலன் 4 நாட்கள் மட்டும் குடும்பம் நடத்தி விட்டு திடீரென மாயமாகி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெற்றோருக்கு தெரியாமல் கோயிலில் காதலியை திருமணம் செய்த காதலன் 4 நாட்கள் மட்டும் குடும்பம் நடத்தி விட்டு திடீரென மாயமாகி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்திபா(19) இவர் கனகம்மாசத்திரத்தில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில் சிறுவானூர் கிராமத்தை சேர்ந்த ஜெபஸ்டின்(21) என்பவரும் வேலை செய்கிறார். அவ்வப்போது இருவரும் ஒருவரையொருவர் சந்தித்ததால் காதல் மலர்ந்துள்ளது. 

இந்நிலையில், கீர்த்திபாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் அவரது பெற்றோர் ஈடுபட்டனர். இதனால், கீர்த்திபா மனம் உடைந்தார். இந்த தகவலை காதலன் ஜெபஸ்டினிடம் கதறியபடி கூறியுள்ளார். இதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 13ம் தேதி திருப்பாச்சூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர், புட்லூரில் உள்ள பாட்டி வீட்டில் கணவன், மனைவியான வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், திடீரென ஜெபஸ்டின் மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த கீர்த்திபா அக்கம் பக்கத்தில் தேடினார். எங்கு தேடியும் ஜெபஸ்டின் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், மாயமானா எனது கணவரை கண்டுபிடித்து அவருடன் என்னை சேர்த்து வைக்குமாறு கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். திருமணமான 4 நாளில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.