ஊரடங்கிலும் காதல் ஜோடிகள் புதருக்குள் இருந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுக்கொண்ருந்த போது ட்ரோன் கேமராவை பார்த்தவுடன் தலைத்தெறிக்க ஓடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களை சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்தும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர். குறிப்பாக தமிழக காவல்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சில வீடியோக்கள் வெளியாகி சிரிக்க வைத்தது. திருப்பூரில் கேரம் போர்டை வைத்து தனது முகத்தை வாலிபரின் புகைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில், தற்போது போலீசாரின் ட்ரோனில் காதல் ஜோடி ஒன்று சிக்கியுள்ளது. அதில், காதல் ஜோடி ஒன்று புதருக்குள் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, போலீசார் ட்ரோனை அனுப்பினர். அதைக்கண்டதும், துண்டை காணோம், துணியை காணோம் என அவர்கள் தெறித்து ஓடும் வீடியோ காட்சிகள்சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.