Asianet News TamilAsianet News Tamil

திருவள்ளூரில் பயங்கரம்... கொரோனா பாதித்த காவலர் டாஸ்மாக் பாதுகாப்பு பணியில்... அதிர்ச்சியில் குடிமகன்கள்..!

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அந்த காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

Corona Affected police man...police station lock
Author
Thiruvallur, First Published May 8, 2020, 1:11 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அந்த காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கி தவித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.  இதுவரை தமிழகத்தில் 5409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் இதன் விரீயம் சற்றும் குறையவில்லை. 

Corona Affected police man...police station lock

முக்கியமாக ஊரடங்கு நேரத்திலும் தனது உயிரை பொருட்படுத்தாமல் சுகாதாரத்துறையினர், செவிலியர்கள், மருத்துவர்கள், காவலர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரை கொரோனா வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் மட்டும் இதுவரை 60க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Corona Affected police man...police station lock

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட ஆரணியில் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த காவல்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த காவலர் நேற்று டாஸ்மாக் பாதுகாப்பு பணியில் இருந்தவர் என்பதால் மதுப்பிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios