Asianet News TamilAsianet News Tamil

பால் தினகரன் இல்ல திருமண விழாவிற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் - ஆச்சரியப்படுத்திய மணமக்கள் !!

மதுரவாயல் அருகே அமைந்துள்ள இயேசு அழைக்கிறார் கூட்ட அரங்கில் நடைபெற்ற பால் தினகரன் அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தார்.

Chief Minister MK Stalin arrives at Jesus calls  Paul Dhinakaran's family wedding
Author
First Published Sep 15, 2023, 6:47 PM IST | Last Updated Sep 15, 2023, 6:47 PM IST

'இயேசு அழைக்கிறார்' நிறுவனர் மறைந்த டி.ஜி.எஸ்.தினகரன் - ஸ்டெல்லா தினகரனின் மகனும், காருண்யா பல்கலைக்கழக வேந்தருமான பால் தினகரன் - இவாஞ்சலின் பால் தினகரன் தம்பதியினரின் மகள் ஸ்டெல்லா ரமோலாவுக்கும், கோவையை சேர்ந்த ஜோசுவா ஸ்டீபன்-கிரேஸ் ஜோசுவா தம்பதியினரின் மகன் டேனியல் டேவிட்சன்னுக்கும் கடந்த 11-ந்தேதி சென்னை அடையாறு டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெபகோபுர வளாகத்தில் திருமணம் நடந்தது.

Chief Minister MK Stalin arrives at Jesus calls  Paul Dhinakaran's family wedding

இந்த நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கோபுர வளாகத்தில் (13ம் தேதி) நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக் கூடையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Chief Minister MK Stalin arrives at Jesus calls  Paul Dhinakaran's family wedding

அப்போது அமைச்சர்கள் ஆன துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, க.பொன்முடி, கீதா ஜீவன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது மணமக்கள் இருவரும் சேர்ந்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலை உணவுத் திட்டம் மற்றும் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு ரூ.2 லட்சம் நன்கொடை அளித்தனர்.

விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!

எனக்கு சாக்லேட் வேணும்.. ரசிகரிடம் க்யூட்டாக சண்டை போட்ட தோனி.. என்ன மனுஷன்யா.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios