Asianet News TamilAsianet News Tamil

1 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி..! கொரோனாவை மறந்து முண்டியடித்து திரண்ட மக்கள்..!

திருவள்ளூர் அருகே இருக்கும் பொன்னேரியில் புதியதாக சிக்கன் பிரியாணி கடை ஒன்று திறக்கபட்ள்ளது. விற்பனையை அதிகரிக்க எண்ணிய உரிமையாளர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி பிரியாணியை 1 ரூபாய்க்கு விற்பதாக அறிவித்தார். அச்செய்தி மக்களிடம் காட்டுத்தீயாக பரவ கடையில் கூட்டம் அலைமோதியது.  

chicken briyani sold for 1 rupee in a newly opened shop
Author
Ponneri, First Published Mar 14, 2020, 5:51 PM IST

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3177 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான்,தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 5 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன.

chicken briyani sold for 1 rupee in a newly opened shop

கொரோனா வைரஸ் கோழிகள் மற்றும் சிக்கன் முலமாக அதிகமாக பரவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவ தொடங்கியது. இதனால் அச்சமடைந்த மக்கள் சிக்கன் மட்டுமில்லாது அசைவ உணவுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழிக்கறி விற்பனை மந்தமடைந்துள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் அருகே இருக்கும் பொன்னேரியில் புதியதாக சிக்கன் பிரியாணி கடை ஒன்று திறக்கபட்ள்ளது. விற்பனையை அதிகரிக்க எண்ணிய உரிமையாளர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி பிரியாணியை 1 ரூபாய்க்கு விற்பதாக அறிவித்தார். அச்செய்தி மக்களிடம் காட்டுத்தீயாக பரவ கடையில் கூட்டம் அலைமோதியது.

திருப்பதியில் இலவச தரிசனம்..! தேவஸ்தானத்தின் அதிரடி திட்டம்..!

chicken briyani sold for 1 rupee in a newly opened shop

மதியம் 12 மணிக்கு தொடங்கிய வியாபாரம் இரண்டு மணி நேரத்திலேயே முடிந்தது. கடையில் நேற்று 120 கிலோ கோழிக்கறியில் பிரியாணி தயாராகி இருந்த நிலையில் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இதுகுறித்து கடை உரிமையாளர் கூறும்போது, ‘கொரோனா பீதியால் சிக்கன் பிரியாணி வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டினர். அதனால் புதிதாக திறக்கப்பட்ட கடையில் சிக்கன் பிரியாணி விற்பனை ஆகுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனவே முதல் நாளில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்றோம்’ என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios