திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இருக்கிறது திருகண்டலம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி குப்பம்மாள். இந்த தம்பதியினருக்கு நித்யஸ்ரீ என 4 வயது மகள் இருந்துள்ளார். குழந்தை நித்யஸ்ரீ வீட்டில் துறுதுறுவென விளையாடி கொண்டிருப்பார் என அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

பெரியபாளையம் அருகே வெந்நீரில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பலி

மகளை தினமும் வெந்நீரில் குளிக்கவைத்து பின் மசாஜ் செய்து விடுவது குப்பம்மாளின் வழக்கம். சம்பவத்தன்றும் வெந்நீர் போட்டு குளியலறையில் குப்பம்மாள் வைத்துவிட்டு சமையல் வேலைகள் பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை குளியலறைக்கு சென்றுள்ளது. எதிர்பாராத விதமாக கொதிக்க கொதிக்க இருந்த வெந்நீரில் குழந்தை நித்திய ஸ்ரீ தவறி விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி உடல் வெந்து வலியில் துடித்தது.

சத்தம் கேட்டு ஓடி வந்த குப்பம்மாள் அதிர்ச்சியடைந்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை பரிதாபமாக மரணமடைந்தது. அதைக்கேட்டு குழந்தையின் பெற்றோரும் உறவினர்களும் கதறி துடித்தனர். காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொதிக்கும் நீரில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டிக் டாக்கால் சீரழிந்த குடும்பம்..! மனைவியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொன்ற கொடூர கணவன்..!