பேருந்து மீது அசுர வேகத்தில் மோதிய கார்!தூக்கி வீசப்பட்ட இன்ஜின்!சிதறிய 4 பேர் உடல்கள்! கலங்க வைக்கும் சம்பவம்
திருப்பூர் அருகே தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் அருகே தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூரில் இருந்து பழனிக்கு நேற்று மாலை தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதேசமயம் தாராபுரத்தில் இருந்து திருப்பூருக்கு அதிவேகமாக ஒரு இன்னோவா கார் வந்து கொண்டிருந்தது. ஊதியூர் அருகே கொடுவாய் பகுதியில் அந்த கார், திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவர் மீது இடித்து தூக்கி வீசப்பட்டு மறுபுறம் வந்த தனியார் பேருந்து பயங்கரமாக மோதியது.
இதையும் படிங்க;- சொகுசு காரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய நேரு! விலை இத்தனை கோடியா? இந்த காரை யாரெல்லாம் வச்சிருக்காங்க தெரியுமா?
இதில் காரின் முன்பகுதி கடுமையாக அப்பளம் போல் நொறுங்கி என்ஜின் தனியாக உடைந்து தூக்கி வீசப்பட்டது. காரில் இருந்த 6 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த வீரக்குமார், முருகேசன், சுஜித், வெற்றி செல்வம் ஆகிய 4 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் 4 வழிச்சாலையில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- தரையில் கிடந்த ஸ்ரீமதியின் உடல்.. 4 பேர் தூக்கி செல்லும் புதிய சிசிடிவி வீடியோ காட்சி..!