குடும்ப பெண்கள் போர்வையில் உலா வரும் நகை திருட்டு கும்பல்; வீடியோ வெளியிட்டு கடை உரிமையாளர் குமுறல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி 12 கிராம் நகைகளை திருடிச்சென்ற 3 பெண்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி சிலை அருகே தயா என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று பகல் 3 மணிக்கு 3 பெண்கள் நகை கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் தங்க காசு வாங்குவதாக கூறி கடையில் இருந்த நகைகளை நோட்டமிட்டுள்ளனர். அப்போது எங்களுக்கு காசு பிடிக்கவில்லை வளையல் காட்டுங்கள் என நகைக்கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு நகைக்கடை உரிமையாளர் 12 கிராம் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களை காண்பித்துள்ளார். அப்போது 3 பெண்களில் ஒருவர் தங்க வளையல்களை கையில் அணிந்து கொண்டார். இரண்டு பெண்கள் வேறு டிசைனில் வளையல் காட்டுமாறு கடை ஊழியரை கேட்டு வந்துள்ளனர். இதனால் பார்வைக்கு வைத்திருந்த வேறு தங்க வளையல்களை நகைக்கடைக்காரர் காண்பித்து வந்துள்ளார்.
அதே நேரத்தில் தங்க வளையல் அணிந்திருந்த ஒரு பெண் கடையை விட்டு நைசாக கிளம்பிச் சென்றார். அதன்பிறகு மீதம் இருந்த இரண்டு பெண்களும் தங்களுக்கு மாடல் எதுவும் பிடிக்கவில்லை. என சொல்லிவிட்டு கடையிலிருந்து நைசாக சென்று விட்டனர். மூன்று பெண்களும் சென்றவுடன் கடை உரிமையாளர் காண்பித்த தங்க வளையல்களை மீண்டும் பார்வைக்கு அடுக்கி வைத்த போது 12 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க வளையல்கள் மட்டும் காணவில்லை.
திருவிழாவின் போது காவல்துறை அதிகாரி மீது பட்டாசை கொளுத்தி போட்டு தாக்குதல் - போலீஸ் வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது மூன்று பேரும் நகை கடை உரிமையாளரை ஏமாற்றி தங்க வளையல்களை திருடி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களை தேடிச் சென்றார்.
ஆனால் அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தனது கடையில் தங்க வளையல்கள் திருடு போன சி.சி.டி.வி காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு நகைக்கடைக்காரர்கள் உஷாராக இருங்கள். எங்களது நகை கடையில் மூன்று பெண்கள் தங்க வளையல்களை திருடி சென்றுள்ளனர். என பதிவிட்டார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சந்திராயன் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர்... இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல்!
இதுகுறித்து தாராபுரம் குற்றப்பிரிவு காவல் துறையினர் தங்க நகைக்கடை உரிமையாளரை நேரில் விசாரித்து வருகின்றனர். தாராபுரத்தில் பட்டப் பகலில் 3, பெண்கள் தங்க வளையல்கள் திருடிய சம்பவம் தாராபுரம் நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.