Asianet News TamilAsianet News Tamil

பாளையங்கோட்டை அருகே மாடியில் துணி காய போட்ட கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!

நெல்லை பாளையங்கோட்டை அருகே மாடியில் துணி காய போட்ட கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A college student was electrocuted while drying clothes on the floor near Palayamkottai
Author
First Published Nov 2, 2022, 6:17 PM IST

நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த சமாதானபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

நடராஜனின் மகன் பாலமூர்த்தி. (வயது 20). இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பாலமூர்த்தி கடந்த 31ஆம் தேதி தனது வீட்டின் மாடி சுவரில் துணி காய போட்டு கொண்டிருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கி பாலமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

A college student was electrocuted while drying clothes on the floor near Palayamkottai

மழை நேரம் என்பதுடன், சுவரில் தொட்டபடி உயரழுத்த மின் வயர் மிக தாழ்வாக சென்றதாலும், சுவர் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் பாலமூர்த்தி இறந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு வந்த  பாளையங்கோட்டை காவல்துறையினர் பால மூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க..குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணம் இதுதான்.. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல் !!

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இதற்கிடையில் மின்வாரியம் மற்றும் மாநகராட்சியின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடைபெற்றதாக அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும், தாழ்வாக செல்லும் மின் வயர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

A college student was electrocuted while drying clothes on the floor near Palayamkottai

உயிரிழந்த மாணவரின் குடும்பம் மற்றும் ஆதி தமிழர் பேரவை ஆகியவை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நேரிட்டது.  இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க..தமிழ் மொழியை காப்பாற்றும் பாஜக! எல்லாமே பொய்.. அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விட்ட சவால் !

இதையும் படிங்க..கேட்டது 50 இடம்! கிடைச்சது 3 மட்டும்.. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு குறைந்த இடங்களில் அனுமதி கொடுத்த காவல்துறை

Follow Us:
Download App:
  • android
  • ios