Bodi-Chennai Train:50ஆண்டு கனவு ! போடிநாயக்கனூர் முதல் சென்னைக்கு நேரடி ரயில் சேவை: பிப்ரவரி 19ல் தொடக்கம்
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு நேரடி பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை பிப்ரவரி 19ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு நேரடி பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை பிப்ரவரி 19ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் மூணாறு, தேக்கடி செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் இந்த ரயில் மூலம் போடி சென்று அங்கிருந்து இந்தப் பகுதிக்குச் செல்லலாம். மதுரை முதல் போடி வரையிலான 90 கி.மீ அகலரயில்பாதைத் திட்டம்நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த ரயில்வே சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது
தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில்சேவை கிடைக்க வேண்டும் என்பது இந்த மாவட்ட மக்களின் நூற்றாண்டு கனவாக இருந்தது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலைநகர் சென்னைக்கு ரயில் போக்குவரத்து இருந்தது. ரயில்வே போக்குவரத்து சேவைஇல்லாத ஒரே மாவட்டமாக தேனி இருந்தநிலையில் இப்போது கனவு நனவாகியுள்ளது.
வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் வகையில் போடிநாயக்கனூர்-சென்னை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை-முதல் மதுரை வரை இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்தான் தற்போது போடிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனியில் நிற்கும். கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி ஏசி எக்ஸ்பிரஸ் ரயிலாக அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் 2021ல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாற்றப்பட்டது.
சினிமா பற்றி தேவையில்லாமல் பேசாதிங்கப்பா! பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
போடிநாயக்கனூர்-தேனி இடையிலான 15கி.மீ தொலைவுக்கு அகலரயில்பாதைத் திட்டம் நிறைவடையாமல் இருந்தது. தற்போது இந்த ரயில்பாதையில் சோதனை ஓட்டம் முடிந்து இயக்குவதற்கு தயாராக இருப்பதாக சான்று அளிக்கப்பட்டுள்ளது. மதுரை-தேனி இடையிலான 75கி.மீ அகல ரயில்பாதைத் திட்டமும் கடந்த ஆண்டு மே 26ம்தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை முதல் போடி வரையிலான 90கி.மீ ரயில்வே பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் 1953-54ல் மீட்டர் கேஜ் பாதையாக மாற்றப்பட்டது. 2010ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில்பாதை அகற்றப்பட்டு அகலரயில்பாதையாக மாற்றப்பட்டது.
நாகாலாந்து,திரிபுரா, மேகாலயா தேர்தல் தேதி வெளியானது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
போடிநாயக்கனூர் முதல் சென்னை வரை செல்லும் இந்த ரயில் கரூர், சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னை சென்ட்ரல் நிலையம் வந்து சேரும். இந்த ரயில் நடைமுறைக்கு வந்தால், தினசரி சென்னைக்கு தேனி மாவட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 2 ஆயிரம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை- மதுரை-போடி நாயக்கனூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மதுரைக்கு காலை 7.15 மணிக்கு வந்து சேரும் அங்கிருந்து புறப்பட்டு உசிலம்பட்டிக்கு காலை 8.01 மணிக்கும், ஆன்டிபட்டிக்கு 8.21 மணிக்கும், தேனிக்கு 8.40 மணிக்கும் வந்து சேரும். தேனியிலிருந்து புறப்பட்டு போடிக்கு காலை 9.35 மணிக்கு சென்றடையும்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற பிப்.27ல் இடைத்தேர்தல்
போடிநாயக்கனூரில் இருந்து இரவு 7.55 மணிக்கு புறப்படும் ரயில், மதுரைக்கு இரவு 10.50 மணிக்கும், சென்னைக்கு மறுநாள் காலை 7.55 மணிக்கும் சென்றடையும்
மதுரை முதல் போடி வரையிலான 90கி.மீ தொலைவுக்கு 2மணிநேரம் 20 நிமிடங்கள் எடுக்கிறது. இந்த ரயில் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்தும், செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை மதுரையில் இருந்தும் புறப்படுகிறது