Assembly Election 2023: நாகாலாந்து,திரிபுரா, மேகாலயா தேர்தல் தேதி வெளியானது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது
நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது
3 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிகிறது. நாகாலாந்து மாநிலத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் 12ம் தேதியிலும், மேகாலயா சட்டப்பேரவைக் காலம் மார்ச் 15ம் தேதியிலும், திரிபுராவின் பதவிக்காலம் மார்ச் 22ம் தேதியும் முடிகிறது. இந்த 3 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தொகுதிகள் தலா 60 தொகுதிகள் உள்ளன.
திரிபுராவில் பாஜக அரசுஆள்கிறது, நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி ஆள்கிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி ஆள்கிறது, இந்த கட்சி மட்டும்தான் தேசிய அங்கீகாரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தல் ஆணையம் வன்முறை அற்ற தேர்தல் நடத்த உறுதி பூண்டுள்ளது.ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை.நாகாலாந்து, திரிபுரா, மேகாலயாவில் புதிதாக 2.28 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
97ஆயிரம் வாக்காளர்கள் 90வயதுக்கும் மேற்பட்டவர்கள்,2600 வாக்காளர்கல் 100 வயதுக்கும் மேற்பட்டவர்கள். தேர்தலுக்கு முன்பாக 18வயது நிறைவடையும் இளைஞர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள், அந்த வகையில் 3 மாநிலங்களில் இருந்து 10ஆயிரம் பேர் புதிதாக வாக்காளராக விண்ணப்பித்துள்ளனர்.
சினிமா பற்றி தேவையில்லாமல் பேசாதிங்கப்பா! பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
3 மாநிலங்களிலும் சேர்த்து 376 வாக்குப்பதிவு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாகாலாந்து, மேகாலயா, திரிபுராவில் பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும்.
3 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 62.80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 31.47 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். 1.76 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
நாகாலாந்து மாநிலத்துக்கு மார்ச் 12ம் தேதியும், மேகாலாயாவுக்கு மார்ச் 15ம் தேதியும், திரிபுராவுக்குமார்ச் 22ம் தேதியும் சட்டப்பேரவைக் காலம் முடிகிறது.
திரிபுரா மாநிலத்துக்கு பிப்ரவரி 16ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. 3 மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும்
3 மாநிலங்களிலும் தலா 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. திரிபுரா மாநிலத்துக்கான தேர்தல் அறிவிக்கை வரும் 21ம்தேதி வெளியிடப்படும். ஜனவரி 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள், 31ம் தேதி வேட்புமனு பரிசீலனையும் பிப்ரவரி 2ம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா இமாச்சலப்பிரதேசம் சென்றது
பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடக்கும் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கை வரும் 21ம் தேதியும், பிப்ரவரி 7ம்தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசித் தேதியும், 8ம்தேதி வேட்புமனு பரிசீலனையும் நடக்கும். 10ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசிநாள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்