Rahul Gandhi yatra: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா இமாச்சலப்பிரதேசம் சென்றது
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று காலை இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்குள் சென்றது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று காலை இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்குள் சென்றது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கினார். இதுவரை 115 நாட்களுக்கும் மேலாக நடந்து, 3ஆயிரம் கி.மீ தொலைவுக்கும் அதிகமாக ராகுல் காந்தி கடந்துள்ளார்.
இதுவரை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலம் முடித்து, ராகுல் காந்தி இன்று இமாச்சலப் பிரதேசத்துக்குள் காலை நுழைந்துள்ளார்.
இமாச்சலப்பிரதேசம் இந்தோரா உள்ள சோதனைச் சாவடிக்கு இன்று காலை வந்த ராகுல் காந்தியை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு,துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மாநிலத் தலைவர் பிரதிபா சிங், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், வரவேற்றனர்.
கடும் பனி பொழிவுக்கும் மத்தியில் ராகுல் காந்தி, மிகுந்த உற்சாகத்துடன் நடந்தார். ராகுல்காந்தி யாத்திரையில் ஏற்கெனவே பாதுகாப்பு குளறுபடிகள் நடந்ததால், இன்று கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தமிழ்நாடு என்ற பெயரை அவ்வளவு எளிதா மாற்றிவிட முடியாது - ஆளுநர் தமிழிசை
ராகுல் காந்தி சாலையில் நடக்கும் போது இளைஞர்களிடம், மக்களிடம் பேசிக்கொண்டே நடந்தார். இந்தோரா சட்டசபைக்குள் 24 கி.மீ நடக்கும் ராகுல் காந்தி, மலோக் கிராமத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.
ராகுல் காந்தி தனது யாத்திரையின்போது நிருபர்களிடம் கூறுகையில் “ மத்திய அரசின் அனைத்துக் கொள்கைகளான பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, விவசாயிகளுக்கு எதிரான சட்டம் ஆகிய அனைத்தும் 4 கோடீஸ்வரர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டவை. விவசாயிகளின் நலன், இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை ஆகியவை மத்திய அரசின் திட்டத்தில் இல்லை.
ஆர்எஸ்எஸ் பாஜக ஆகியவை இணைந்து மக்களிடம் வெறுப்பையும், வன்முறையையும், அச்சத்தையும் பரப்புகின்றன. வேலையின்மை, பணவீக்கம் ஆகிய இரு முக்கிய பிரச்சினைகளை பாஜக ஒதுக்கித்தள்ளுகிறது. மக்களை ஒருங்கிணைக்க, ஒற்றுமைப்படுத்த, இந்த விவகாரங்களை மக்களிடம் எழுப்ப, 4 மாதங்களுக்கு முன் கன்னியாகுமரியில் இந்த யாத்திரையைத் தொடங்கினேன்.
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தைப் பற்றி பேச எனக்கு வாய்ப்பில்லை.நீதித்துறையிடமும் எழுப்பமுடியவில்லை, ஊடகத்திடமும் கூற முடியவில்லை, அனைத்தும் பாஜகவால் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளன.
முன்னதாக, இமாச்சலப் பிரதேசம் பயணத் திட்டத்தில் இல்லை, ஆனால் இந்த மாநிலத்தை உள்ளடக்கும் வகையில் யாத்திரையின் வழியை மாற்றி ஒரு நாள் மட்டுமே ஒதுக்கினோம்,
ஆனால், அதிக நாட்கள் இங்கு நான் பயணிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஜனவரி 30 மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் காஷ்மீரில் யாத்திரையை முடிக்க இருக்கிறேன். இந்த யாத்திரை கற்றுக்கொள்ள பல பாடங்களை அளித்துள்ளது.
மக்களின் மனதில் என்ன இருக்கிறது, எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிய நல்ல முயற்சியாக இருக்கிறது.” எனத் தெரிவித்தார்