சைக்கிள் வழங்கும் விழாவில் அரசுப் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட திமுகவினர்

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு பள்ளி விழாவில் தி.மு.கவினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

clash between two gangs of dmk persons at government school event in theni district vel

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்களை வரவேற்று ஆசிரியர்கள் அவர்களின் பெயர்களை வாசிக்கும்போது நகர்மன்ற தலைவரான வனிதா நெப்போலியன் அவர்களின் பெயரை கணவரின் பெயரோடு முழுவதும் வாசிக்காமல் வனிதா என மட்டும் வாசித்து வரவேற்று உள்ளனர்.

ஒகேனக்கல் காவிரி கரையோரம் இளம் காதல் ஜோடி விபரீத முடிவு; காதலன் பலி, பள்ளி மாணவி கவலைக்கிடம்

இதனை அறிந்த நகர மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் கம்பம் நகரில் நடைபெறும் அரசு விழாக்களில் நகர்மன்ற தலைவரையோ, உறுப்பினர்களையோ அழைக்காமல் அரசு விழாவை கட்சி விழாவாக  கட்சியின் நிர்வாகிகளை மட்டும் வைத்துக்கொண்டு விழா நடத்துவதாக எம்.எல்.ஏவிடம் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது எம்.எல்.ஏ உடன் வந்த ஆதரவாளர்கள் தகாத வார்த்தையில் பேசி அவர்களுக்குள் கைகலப்பாகி சண்டை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டையே ஆட்சி செய்ய தகுதி இல்லாதவர் மு.க.ஸ்டாலின் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

இதில் காயம் அடைந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து விட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios