Asianet News TamilAsianet News Tamil

சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நாடு முழுவதும் சோதனையிட அதிகாரம் உள்ளது - மத்திய அமைச்சர் பதில்

சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்த அதிகாரம் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

central minister vk singh talk about cbi ed raids in karaikudi
Author
First Published Jun 23, 2023, 1:14 PM IST

மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ தமிழகத்தில் சுதந்திரமாக விசாரணை நடத்திக்கொள்ளலாம் என்ற அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் இனி வரும் காலத்தில் தமிழகத்தில் ஏதேனும் சோதனை நடத்தவேண்டும் என்றால் தமிழக அரசிடம் அனுமதி பெற்ற பின்னரே சோதனையோ, விசாரணையோ மேற்கொள்ள முடியும் என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங்  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மித்திரங்குடியில் பிரதமர் கிராம சாலைகள் திட்டம் மூலம் ரூ.4 கோடியில் அமைக்கப்படும் சாலைப் பணிகளை பார்வையிட்டார். மேலும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திண்டுக்கல்லில் தாய், மகள் வெட்டி படுகொலை; ஒருவர் படுகாயம் - காவல்துறை விசாரணை

இதனைத் தொடர்ந்து இணை அமைச்சர் வி.கே.சிங் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 68 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி சாதித்துள்ளார். சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளுக்கு நாடு முழுவதும் சோதனையிட அதிகாரமும், சட்டமும் உள்ளது.

கோவையில் பெண் பேருந்து ஓட்டுநரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த எம்பி கனிமொழி

அவர்களது விசாரணையில் யாரும் குறுக்கிட முடியாது. மணிப்பூர் விவகாரத்தில் மோடி தலையிட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. தேவை ஏற்படும் பட்சத்தில் அவர் கட்டாயம் தலையிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios