திண்டுக்கல்லில் தாய், மகள் வெட்டி படுகொலை; ஒருவர் படுகாயம் - காவல்துறை விசாரணை

திண்டுக்கல்  அருகே தாய், மகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், மருமகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தாடிக்கொம்பு  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

woman and daughter killed by unknown persons in dindigul district

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலணியில் வசித்து வருபவர் அய்யனார். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 55). இவர்களது மகள் ராசாத்தி(32), ராசாத்தியின் கணவர் லட்சுமணன் (35) அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். லட்சுமணன் கள்ளிப்பட்டி அருகிலுள்ள தனியார் இரும்புத் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு வள்ளியம்மாள் மகள் ராசாத்தி மருமகன் லட்சுமணன்  ஆகியோர் வீட்டில் அமர்ந்திருந்த போது மர்ம நபர்கள் கையில் கூர்மையான ஆயுதங்களுடன் திடீரென புகுந்து  தாயையும், மகளையும் கொடூரமாக வெட்டினர். அதனை தடுக்க வந்த மருமகன் லட்சுமணனையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்

பெண் பேருந்து ஓட்டுநரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த எம்பி கனிமொழி

வெட்டுப்பட்ட தாய், மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மருமகன் லட்சுமணனுக்கும் வயிற்றில் கத்தி குத்து விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லட்சுமணனை அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம்  திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சாத்தான்குளத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; அ.ம.மு.க. நிர்வாகி கைது

சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு காவல் துறையினர் வள்ளியம்மாள் மற்றும் ராசாத்தி இருவரின் உடலையும் கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வந்து விசாரணையை துரிதப்படுத்தினார். இது குறித்து தாடிக்கொம்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை செய்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios