வீரகனுார் மயானக் கொள்ளை விழாவில் குழந்தை வரம் கேட்டு ‘ரத்தச் சோறு’ சாப்பிட்ட பெண்கள்!
ரத்தம் கலந்த சாப்பாட்டை வீசியபோது, பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். 100க்கும் மேற்பட்ட ஆடு, 200க்கும் மேற்பட்ட கோழிகளின் கழுத்தை கடித்து ரத்தத்தை ‘ருசி’ பார்த்தபடி ஊர்வலமாக வந்தனர்.
வீரகனுாரில் நடந்த மயானக் கொள்ளை விழாவில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தை வரம் கேட்டு ‘ரத்த சோறு’ சாப்பிட்டு வழிபாடு செய்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, வீரகனுாரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நான்கு ஆண்டுகளுக்கு பின், கடந்த, 8ல், மயானக் கொள்ளை விழாவையொட்டி பால் குடம் ஊர்வலத்துடன் விழா துவங்கியது.
காடு வளைப்பு, காளி புறப்பாடு, வள்ளாளராஜன் கோட்டை இடித்து, மயான சூறை இடுதல் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன், வீரபத்திர சுவாமி, பாவடைராயன் சுவாமிகள் புஷ்ப தேர் அலங்காரத்தில், சுவேத நதிக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து, சுவேத நதி மண்ணில் பெரியாண்டிச்சி அம்மன் சுவாமி உருவம் வடிவமைத்து, 10க்கும் மேற்பட்ட ‘கிடா’, 20க்கும் மேற்பட்ட கோழிகளை பலி கொடுத்தனர். தானியங்கள் கலந்து பொங்கல் வைத்து எடுத்து வந்த சாப்பாட்டில் பலி கொடுத்த ஆடுகளின் ரத்தத்தை விட்டனர்.
சாணக்கியர் தோனி மாதிரி தான் இருந்தாராம்! 3D படம் போட்டுக் காட்டி நிரூபித்த விஞ்ஞானிகள்!
காளி உருவம் அணிந்தும், பூசாரி பூங்கரகம் எடுத்து வந்தபின், மயான கொள்ளை விழா நடந்தது. ரத்தம் கலந்த சாப்பாட்டை குழந்தை வரம் கேட்டு மடிப்பிச்சை எடுத்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசாதமாக வழங்கினர். அதேபோல், தீராத நோய்கள், பல்வேறு பிரச்னைகளில் உள்ளவர்களுக்கு ரத்த சாப்பாடு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ரத்தம் கலந்த சாப்பாட்டை வீசியபோது, பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். வேடமிட்டு வந்த 50க்கும் மேற்பட்ட பருவதராஜ குல மீனவர்கள், நேர்த்திக் கடனாக வழங்கிய 100க்கும் மேற்பட்ட ஆடு, 200க்கும் மேற்பட்ட கோழிகளின் கழுத்தை கடித்து ரத்தத்தை ‘ருசி’ பார்த்தபடி ஊர்வலமாக வந்தனர்.
இந்த விழாவில், ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல், வீரகனுார் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
உக்ரைன் மீது அணுகுண்டு தாக்குதலா... புடினிடம் பேசி தடுத்து நிறுத்திய பிரதமர் மோடி!