சாணக்கியர் தோனி மாதிரி தான் இருந்தாராம்! 3D படம் போட்டுக் காட்டி நிரூபித்த விஞ்ஞானிகள்!
கேப்டனாக தோனியின் புத்திசாலித்தனமான முடிவுகள் ஐபிஎஸ் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால், தோனிக்குக் கொடுத்த ‘சாணக்கியர்’ பட்டம் இந்த 3டி படம் மூலம் நிஜமாகும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
ஒரு விஞ்ஞானிகள் குழு இந்திய தத்துவஞானி சாணக்கியரின் 3D மாடல் படத்தை உருவாக்கியுள்ளது. அந்த படம் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும் தற்போதைய சிஎஸ்கே அணி கேப்டனுமான எம்.எஸ். தோனியைப் போலவே உள்ளதால், சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
பண்டைய இந்திய தத்துவ ஞானியான சாணக்கியர் சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் ஆலோசகராக இருந்தவர். கிமு 3ஆம் நூற்றாண்டுக்கு இடையில் எழுதப்பட்ட இவரது அரசியல் பற்றிய புத்தகமான அர்த்தசாஸ்திரம் மிகவும் பிரபலமான படைப்பாகக் கருதப்படுகிறது.
இவர் எப்படி இருந்திருப்பார் என்ற நோக்கில் விஞ்ஞானிகள் உருவாக்கிய 3டி படம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் தோனி கையாளும் வியப்பூட்டும் உத்திகள் காரணமாக ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவரை கிரிக்கெட்டின் 'சாணக்யா' என்று அழைப்பது வழக்கம்.
உக்ரைன் மீது அணுகுண்டு தாக்குதலா... புடினிடம் பேசி தடுத்து நிறுத்திய பிரதமர் மோடி!
கேப்டனாக தோனியின் புத்திசாலித்தனமான முடிவுகள் ஐபிஎஸ் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால், தோனிக்குக் கொடுத்த ‘சாணக்கியர்’ பட்டம் இந்த 3டி படம் மூலம் நிஜமாகும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
பீகாரில் உள்ள மகதா டிஎஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாணக்யாவின் படங்களை உருவாக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
ட்விட்டரில் வைரலாகி வரும் பதிவில், “மகாதா டிஎஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அர்த்தசாஸ்திரம் நூலின் ஆசிரியரான சாணக்கியர் எப்படி இருந்திருப்பார் என்று காட்டுவதற்காக இந்த 3டி உருவத்தை உருவாக்கியுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கோட்டையில் யூசுப் பதான் போட்டி! மம்தா மோடியைக் கண்டு அஞ்சுவதாக காங். பதிலடி